செஸ் ஓலிம்பியாட் 2022: முழு பதக்கப் பட்டியல் வெளியீடு
44வது செஸ் ஓலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஓன்றில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 86 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் 2000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பதக்கங்களை பெற்றனர்.
செஸ் ஓலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தொடங்கி வைக்க பாரத பிரதமர் வந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்க விழா மிக சிறப்பாக அமைந்தது. அதை போலவே போட்டியின் இறுதி நாளான நேற்று மிக பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியுடன் நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் மற்றும் மகளிர் அணிகள் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. மொத்தமுள்ள 11 ரவுண்ட் போட்டிகளில் அந்த அணி 19 புள்ளிகளை பெற்றுள்ளது. இதே போல 2வது இடத்தை அர்மேனியா நாட்டின் அணி பிடித்துள்ளது. அந்த அணியும் 11 போட்டிகளில் 19 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால் டை பிரேக்கர் புள்ளிகளில் உஸ்பெகிஸ்தானை விட குறைவாக இருந்ததால் வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட பிரக்ஞானந்தா, யூகேஷ் உள்ளிட்ட வீரர்கள் விளையாடிய இந்தியாவின் பி அணி 3வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
இந்திய பி அணி 11 போட்டிகளில் 18 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தியாவின் ஏ அணி 17 புள்ளிகளை மட்டுமே பெற்றதால் 4வது இடத்தை பிடித்தது. எனினும் பதக்கம் எதுவும் இல்லை.
உடனுக்குடன் தகவல்களை பெறவும் மேலும், செய்திகள், ஆன்மீகம் தொடர்பான தகவல்கள், ஜோதிடம் போன்றவற்றை அறியவும் தலதமிழ் இணையதளத்தை படிக்கவும்.