செஸ் ஓலிம்பியாட்: 44 வது செஸ் ஓலிம்பியாட் போட்டி ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ம் தேதி வரை சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் செஸ் ஓலிம்பியாட் போட்டியில் பங்குகொள்வதற்கு இந்தியா சார்பில் 20 பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு மே 8 ம் தேதியிலிருந்து 15 ம் தேதி வரை மாமல்லபுரத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இஸ்ரேல் நாட்டை சார்ந்த பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் ஜெல்ஃபாண்ட் இந்திய அணிக்கு பயிற்சி தருகிறார்.

பிரஞ்ஞானந்தா உட்பட இந்திய அணியில் 20 பேர் பங்கேற்கின்றனர். அவற்றில் 10 பேர் ஆண்கள் 10 பேர் பெண்கள். இதில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 6 பேர் ஆண்கள் பிரிவிலும், 2 பேர் பெண்கள் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர.
இந்நிலையில் அணியின் ஆலோசகராக முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.