சிக்கன் பிரியாணி:
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 1/2 கிலோ
- சீரகசம்பா அாிசி – 1/2 கிலோ
- பொிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- ப.மிளகாய் – 3
- இஞ்சி பூண்டு விழுது – 11/2 தேக்கரண்டி
- தயிா் – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி – 1/2 கட்டு
- புதினா – 1/2 கட்டு
- மல்லி தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- பிாியாணி மசாலா பொடி – 11/2 டீஸ்பூன்
- பட்டை – 2
- இலவங்கம் – 3
- ஏலக்காய் – 3
- பிரியாணி இலை – 2
- அனாசிபூ – 2
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- நெய் – 2 தேக்கரண்டி
- உப்பு – தே.அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் ஊற்றி நன்கு எண்ணெய் காய்ந்தவுடன் அதில் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிாியாணி இலை மற்றும் அனாசிபூ இவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு பொிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் ப. மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.பிறகு தக்காளி, மல்லி , புதினா இலைகளை போட்டு நன்கு வதக்கவும். பின்னா் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு நன்கு வதக்கவும். சிக்கன் நன்கு வதங்கி வந்தவுடன் தயிா் சோ்க்கவும். பின்னா் மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொடகள் மற்றும் உப்பு சோ்த்து பச்சை வாசனை போகும் வரை சிக்கனுடன் சோ்த்து நன்கு கிளறவும்.
சிக்கன் பாதி வெந்து வந்தவுடன் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை டம்ளா் தண்ணீா் என்ற அளவில் தண்ணீா் சோ்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீா் கொதித்தவுடன் கழுவி வைத்துள்ள சீரகசம்பா அாிசியை சோ்க்கவும். இறுதியாக சிறிதளவு நெய் சோ்த்து குக்கர் மூடியை போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். பின்னர் தம் அடங்கியதும் எடுத்து கிளறினால் சுவையான சிக்கன் பிாியாணி ரெடி.