ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழுவை அமைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தொடர் கதையாக மாறும் ஆன்லைன் விளையாட்டில் பணம் இழக்கும் நபர்களின் விரக்கத்தியிலான தற்கொலைகள் தமிழகத்தை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
விளையாட்டு என்பது பொதுவாக ஓரு காலத்தில் மகிழ்வை தருவதாக இருந்தது. வெரும் பொழுதுபோக்காக இருந்த விளையாட்டுகள் இன்று உயிரை எடுக்கும் விளையாட்டாகவும் ஆன்லைனில் பணம் கட்டி அதில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து பலர் இன்று அவர்களின் வாழ்க்கையை தொலைத்து தன் குடும்பத்தையும் இழந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கடன் வாங்கி பணத்தை ரம்மியில் போட்டு விளையாடுகின்றனர். போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று எண்ணி பலர் பணத்தை இழந்து விடுகின்றனர். ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் அனைத்து அபாயத்தை தரக்கூடியது.
ஆன்லைன் விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இது தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல் கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, இ.கா.ப ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் குழு, இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்க வேண்டும்.
இக்குழுவின் அறிக்கையின் படி அவசர சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.