தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் ‘நெய்தல் உப்பு’ விற்பனைக்கு அறிமுகம்

0
7

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் ‘நெய்தல் உப்பு’ என்ற பெயரில் வெளிச்சந்தைக்கு விற்க இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

உப்பு தொழில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும். மீதம் உள்ள மழைக்காலங்களில் உப்பு தொழில் மழையின் காரணமாக மிகவும் பாதிக்கப்படும். இந்நிலையில் கூலித் தொழிலாளர்களின் குடும்பம் பாதிப்படையும் என்பதை கருத்தில் கொண்டும், மழைக்காலங்களில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் ‘நெய்தல் உப்பு’ விற்பனைக்கு அறிமுகம்

இந்நிலையில், உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000/- நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்

மேலும் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் “நெய்தல் உப்பு” என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனையினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர் எம்.பி. கனிமொழி, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 பேருக்கு ரூ.5.43 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், ஹஜ் பயணம் மேற்கொண்ட 1,649 பயனாளிகளுக்கு ரூ.4.56 கோடி மானியத்தொகையும் முதல்வர் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here