ஹைப்பர்லூப் ரயிலை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது சீனா

0
25

ஹைப்பர்லூப் மூலம் இயங்கும் ரயிலை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது சீனா. இதனால், போக்குவரத்தில் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்லும் சீனா.

சீனாவின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஹைப்பர்லூப் போன்ற ரயில் அமைப்பை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர். வெற்றிடம் போன்ற சூழல் நிலவும் குழாய் ஒன்றில், ‘மேக்னடிக் லெவிடேஷன்’ என்கிற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பயணிகள் மணிக்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வழி செய்யும் ஹைப்பர்லூப் ரயில்.

ரயில் போல ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிப்பதற்கு பதிலாக, கார்கள் சாலைகளில் பயணிப்பது போல இந்த ஹைப்பர்லூப் பாட்கள் ஒன்றன் பின் ஒன்று வரிசையாக தனக்கான பாதையில் பயணிக்கும். பாட்களை தனித் தனி திசைகளிலோ அல்லது ஒரே திசையில் சேர்த்தோ இயக்கலாம்.

ஹைப்பர்லூப் ரயிலை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது சீனா

சீனாவின் மாக்லேவ் ரயில் சமீபத்தில் மணிக்கு 80 மைல் (130 கிமீ) வேகத்தில் ஓடியபோது, ​​அத்தகைய அமைப்பின் முதல் “முழு அளவிலான மற்றும் முழு-செயல்முறை ஒருங்கிணைந்த சோதனையை” முடித்து உலக வரலாற்றை உருவாக்கியுள்ளது. வட சீனாவில் ஷாங்க்சி மாகாணத்தில் முதற்கட்டமாக 1.25-மைல் (2 கிமீ) டத்தோங் சோதனைப் பாதையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தியாவிலும் இதுபோன்ற ஹைப்பர்லூப் ரயில் திட்டத்தை கொண்டு வர பல்வெறு வகையான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. உலகிலேயே அதிக ரயில் சேவைகளை தரும் நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா இது போன்ற திட்டத்தின் மூலம் விரைந்து சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது கடந்த சில ஆண்டுகளாகத் தான் ரயில்வே துறையில் சில புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் போன்ற தொழில்நுட்பங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதற்கிடையே ரயில்வே அமைச்சகம் சென்னை ஐஐடி உடன் இணைந்து உள்நாட்டிலேயே ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை உருவாக்க உடன்பாடு செய்துள்ளது. இந்தியாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் குறித்த பேச்சு 2017 முதலே இருந்து வருகிறது. அப்போது அப்போது ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு, ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். விரைவில் இது போன்ற தொழில் நுட்பம் இந்தியாவில் ஏற்படுத்தப்படும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here