சிரஞ்சீவி: பொங்கலுக்கு சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முக்கிய நகரங்களில் ஒன்றான விசாகப்பட்டினத்தில் சிரஞ்சீவி வீடு கட்டப்போவதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலத்தை விட்டு அவர் விசாகப்பட்டினத்தில் வசிக்கப் போகிறார் என்ற வதந்தியும் பரவியது. அதை பலரும் அரசியலாக்கி செய்திகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து விளக்கம் அளித்த சிரஞ்சீவி, ‘விசாகப்பட்டினத்தில் ஒரு இடத்தை வாங்கினோம் என்பது பற்றி சொன்னேன் வேற எதுவுமில்லை. எனது மகன் ராம் சரண் கோவாவில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளார். எனக்கு ஊட்டியில் வீடு கட்ட வேண்டும் என்று ஆசை. அது ஏறக்குறைய ரெடியாகிவிட்டது. அவற்றை முடித்த பின் விசாகப்பட்டினத்திலும் வீடு கட்டலாம் என்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பல தெலுங்கு படங்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளன. சிரஞ்சீவியின் பல படங்களும் இதில் அடங்கும். இந்திய நடிகர்கள் பலருக்கும் ஊட்டி மிகவும் பிடித்தமான இடம். சிலருக்கு அங்கு வீடுகள் மட்டுமல்ல எஸ்டேட்களும் இருக்கின்றன.