சித்ரா பௌர்ணமி வழிபடும் முறைகள் மற்றும் சிறப்புகள்

0
104

சித்ரா பௌர்ணமி வருகின்ற ஏப்ரல் 16 சனிக்கிழமை அன்று எல்லா தலங்களிலும் சிறப்பு பூசைகள் நடை பெறும். ஏப்ரல் 14 அன்று மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருகல்யாணமும் அதனை தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் வெகு விமர்சையாக சித்ரா பௌர்ணமி நாளான ஏப்ரல் 16ம் தேதி அன்று நடைபெறுவது மிகவும் சிறப்பானதாகும்.

சித்ரா பௌர்ணமி என்றால் என்ன?

சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவு நாளன்று எல்லாரோலும் வணங்கப்படும் நாளாகும். மேலும், சித்ரா பௌர்ணமி அன்று சித்ர குப்தரை வழிப்படும் நாளாகவும் பார்க்கப்படுகிறது. பார்வதி தேவிக்கு சித்தர வடிவில் பிறந்தான். பின் காமதேனு வயிற்றில் சித்ரா பௌர்ணமி அன்று பிறந்து சித்திர குப்தர் என்ற பெயரினை பெற்றார்.

ஓருவர் செய்யும் நன்மை தீமைகளை கணக்கிடும் யமதர்மனின் உதவியாராக சித்ரகுப்தர் இருக்கின்றார். ஆதலால் சித்ரா பௌர்ணமி அன்று வணங்குவது சிறப்புக்குரியதாகும். இந்நாளினை சித்திர பூர்ணிமா என்றும் அழைப்பர்.

இந்து வேதத்தில் சித்ரகுப்தன்

ஒவ்வொரு தனிநபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை தீர்மானிப்பதில் யமனுக்கு உதவுகிறார். ஒருவர் இறந்த பிறகு, அவர் யமனின் இருப்பிடத்தை அடைந்து, இறந்த நபரின் செயல்களை மதிப்பீடு செய்த பிறகு, சித்ரகுப்தன் அவரை நல்லவர் அல்லது தீயவர் என்று அறிவிப்பார் என்று நம்பப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி வழிபடும் முறைகள், சிறப்புகள்

எனவே சித்ரா பூர்ணிமா தினம் சித்ரகுப்தரின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது மற்றும் பக்தர்கள் இந்த புனித நாளில் அவரை வணங்கி தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது ஐதீகம். இந்து புராணத்தின் படி, சித்ரா பூர்ணிமா நாள் கடவுள்களின் இறைவனான இந்திரனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று வழிபடும் முறைகள்

சித்ரகுப்தர் காமதேனு வயிற்றில் பிறந்த தால் அன்று பசு மாட்டிற்கு பொட்டு வைத்து கொம்பில் மஞ்சள் தடவி வணங்குவர். பின் மாட்டிற்கு காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவைகளை கொடுப்பர். சர்க்கரைப் பொங்கள் வைத்தும், உப்பு சேர்க்காமலும் உணவு செய்து வைத்து வழிபடுவதும் வழக்கமாகும். சித்ரகுப்தரை வணங்குபவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்கின்றனர்.

சித்ரகுப்தர் கோவில்கள்

சித்ரா பூர்ணிமா நாளில், தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இவற்றில் காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவில், திருவக்கரையில் உள்ள சந்திர மௌலீஸ்வர் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில் போன்ற கோவில்களில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் பூஜைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

சித்ரா பௌர்ணமி முக்கிய நேரங்கள்

1. சூரிய உதயம் ஏப்ரல் 16, 2022 காலை 6:09

2. சூரிய அஸ்தமனம் ஏப்ரல் 16, 2022 மாலை 6:44

3. பௌர்ணமி திதி ஏப்ரல் 16, 2022 அன்று அதிகாலை 2:25 மணிக்கு தொடங்குகிறது

4. பௌர்ணமி திதி ஏப்ரல் 17, 2022 காலை 12:25 மணியுடன் முடிவடைகிறது

அம்பாள் வழிபாடு

சித்ரா பூர்ணிமா அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பூர்ணிமா வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.

சித்ரா பௌர்ணமியும் கிரிவலமும்

ஓவ்வொரு பௌர்ணமி நாளன்றும் அனைத்து சிவ ஆலயங்களிலும் சிவ பெருமானை வணங்குவதும் பூசைகள் செய்து கிரிவலம் வருவதும் சிறப்புக்குரியதாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் பௌர்ணமி என்றால் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் சித்ரா பூர்ணிமா அன்று கிரிவலம் வருவது சிற்ப்பானதாக பார்க்கப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி வழிபடும் முறைகள், சிறப்புகள்

இரண்டாண்டு காலமாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கிரிவலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பலவல் குறைந்த தன் காரணமாக கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. ஆதலால், பக்கதர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அன்னதானம் வழங்க விருப்பமுள்ளவர்கள் உரிய ஆதாரங்களுடன் வரும் 14ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி ஆணை பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here