கங்கை கொண்ட சோழபுரம்: வெகு விமர்சையாக நடந்தேறிய அன்னாபிஷேகம்

0
5

கங்கை கொண்ட சோழபுரம்: தஞ்சையை ஆட்சிபுரிந்த ராஜராஜ சோனின் மைந்தன் முதலாம் ராசேந்திர சோழனால் தந்தை கட்டிய பெருவுடையார் கோவிலை போலவே அமைக்க முடிவு செய்து கட்டப்பட்ட தலம் பிரகதீஸ்வரர் ஆலயம் இது முதலாம் ராசேந்திரன் காலம் முதல் மூன்றாம் ராசேந்திர சோழன் காலம் வரை சோழநாட்டின் தலை நாகராக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

தஞ்ஞையில் கட்டப்பட்டுள்ள பெருவுடையார் கோவிலை போலவே அமைக்கப்பட்ட கோவில் பிரகதீஷ்வரர் கோவில் யுனஸ்கோவின் பராமரிப்பில் இருந்து வருகின்றது இத்தலம். பழமை வாய்ந்த தலமாக இருந்து தமிழர்களின் கட்டிட கலையை பறைசாற்றுவதாக இருந்து வருகிறது.

ராசேந்திர சோழன் இந்த கோவிலை கட்டதொடங்கும் முன் கங்கை நதிக் கரையில் இருந்து தன் படைகளை அனுப்பி வைத்தான். அங்கு சென்று பல மன்னர்களை வென்று கங்கை நீரை எடுத்து திரும்பினர். அதனால் ராசேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்’ என்ற பெயரும் உரியதாகியது. இந்த இடத்திற்கும் கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரும் நிலைத்து விட்டது.

இதையும் படியுங்கள்: தஞ்சாவூர்: 1000 கிலோ அன்னத்தாலும் 700 கிலோ காய்கறிபழத்தால் அன்னாபிஷேகம்

கங்கை கொண்ட சோழபுரம்: வெகு விமர்சையாக நடந்தேறிய அன்னாபிஷேகம்

தற்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து வரும் இவ்வூர் ஆண்டுக்கு ஓருமுறை நிகழம் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று வெகு விமர்சையாக அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டின் அன்னாபிஷேகம் நேற்று 100 மூட்டைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பச்சரிசியை சுமார் 2,500 கிலோ அரிசியை வடித்தனர்.

பின்னர், பின்னர் சுமார் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லினாலான ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்திற்கு அரிசி சாதம் சாத்தப்பட்டு மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பிரகதீஷ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமான்.

இந்நிகழ்வை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு அங்கு கூடியிருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மீதம் உள்ள அன்னத்தை ஊர் குளம், ஏரி, கிணறு, கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் மீன்களுக்கு இரையாக போடப்பட்டது.

இந்த அன்னாபிஷேகத்தை தொடர்ந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம் வெளிநாட்டு பக்தர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டு பிரகதீஸ்வரரின் அருளை பெற்றனர். இந்த அன்னாபிஷேகத்தை கண்டு வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இது போன்ற பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை அணுகுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here