பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களை விவரிக்கும் நடிகர் சிவக்குமார்

0
19

பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களை விவரிக்கும் நடிகர் சிவக்குமார். இன்று மாலை 6.00 மணிக்கு பொன்னியின் செல்வன் இசை மற்றும் டீரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு ரஜினிகாந்த் மற்றும கமலஹாசன் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் – தெலுங்கு – இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் வெளியாகி, பலரின் காலர் ட்யூனாக மாறியது.

இதற்கடுத்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ’சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் வெளியானது. கடந்த வாரம் அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில், பார்த்திபன், ஜெயராம், ரகுமான், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான ஆனால் சிறிய அளவிலான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இவர்களின் போஸ்ட்டர்களை அவ்வவ்வ போது வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மெருகேற்றி வருகிறது.

இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று மாலை இசை மற்றும் டீரைலர் வெளியீட்டு விழாவில் கதாபாத்திரங்களை சிவக்குமார் விவரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here