தமிழக முதல்வர் விக்னேஷ் சிவன் இயக்கும் விளம்பர படத்தில் நடிக்கிறார்

0
16

தமிழ் திரை உலகில் இயநக்குனராக விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தடம் பதித்தார். அப்படத்தில் தான் நயன்தாராவும் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். அப்படம் நன்றாக ரசிகர்கள் ரசிக்கும் படமாக இருந்தது.

அதன் பின்னர், விக்னேஷ் சிவன் பல படங்களை தமிழில் முக்கிய நட்சத்திரங்களை வைத்து இயக்கி வெற்றி பெற்றார். இடையில் விக்கிக்கும் நயன்தாராவிற்கும் காதல் ஏற்பட்டு சில வருடங்களாக காதல் செய்து வந்தனர். கடந்த மாதம் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் இருவருக்கும் திருமணம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் விக்னேஷ் சிவன் இயக்கும் விளம்பர படத்தில் நடிக்கிறார்

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை வைத்து ஓரு விளம்பரப் படம் எடுக்கும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன். அவ்விளம்பரப் படத்தின் முக்கிய பங்கு மாமல்லபுரத்தில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள செஸ் ஓலிம்பியாட் போட்டிக்கு விளம்பரப்படுத்த முதல்வரை வைத்து விக்கி இயக்குகிறார். இவ்விளம்பரப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு நேற்று நேப்பியர் பாலத்தில் நடைப்பெற்றது. இதற்காக நேப்பியர் பாலம் வழியாக வரும் போக்குவரத்து சிறிது நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெற உள்ளது. அந்த விழாவையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here