மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியான் விக்ரமின் கோபுரா திரைப்படத்தின் இன்று மாலை 5.15க்கு டிரைலர் வெளியானது ரசிகர்கள் மகிழ்ச்சி.
தமிழ் திரைவுலகின் மிக பெரும் முன்னனி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சீயான் விக்ரம். நல்ல கதை அம்சம் மற்றும் சாதிக்கும் திறமைசாளியான படங்களில் நடிப்பவர் விக்ரம். சேது படத்தின் மூலம் மிக பெரும் வெற்றி பெற்று சிறந்த நடிகன் என்பதை உறுதிபடுத்தி வருபவர் விக்ரம் என்றால் மிகையால்ல.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இதில் விக்ரமுடன் இணைந்து இர்பான் பதான், ‘கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அவர் அஸ்லான் இல்மாஸ் என்ற துருக்கி இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். தவிர கோப்ரா படத்தில் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.
படம் வரும் 31-ம் தேதி வெளியாகும் நிலையில் திருச்சி, கோவை, மதுரை என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று கோப்ரா படத்தை புரொமோட் செய்து வருகிறார் நடிகர் விக்ரம். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
இந்த படம் மாபெரும் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.