நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகி தனுஷ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் திருச்சிற்றம்பலம் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக திரையில் இன்னும் ஓடி கொண்டு உள்ளது. இப்படத்தின் வசூல் 100 கோடியை எட்டியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன் சிறப்பான தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ளார். மித்ரன் ஜவகர் இப்படத்தை இயக்கியுள்ளார். சன்டிவி இப்படத்தின் தயாரிப்பை பெற்றுள்ளது. காமெடி, சென்டிமண்ட், நட்பு, காதல் என அனைத்தையும் இக்கதையில் தனுஷ் நடிப்பு மூலம் காட்டப்பட்டுள்ளது. பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்: தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு மல்டிப்லக்ஸ்களில் டிக்கட் 75 கிடைக்கும்
இதற்குமுன் தனுஷ் நடித்த படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாராக ஓடியிருந்தது. அதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் திரையில் ஓளியாகி ரசிகர்களின் ஆராவாரத்தை பெற்றது.

இந்நிலையில், தனது அண்ணன் இயக்கத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் திரையில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த படத்தின் முதல் சிங்கள் சாட் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி படத்தின் மீது இருந்த ஆர்வத்தை தூண்டி விடுவது போல அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
தனுஷ் இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு கதாபாத்திரங்களில் வந்து மிரட்டுகின்றனர். செல்வராகவனும் படத்தில் ஓரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இசையில் யுவன் சங்கர் ராஜா கலக்கியிருக்கிறார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 30 அன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெளியீட்டு அன்று ரீலிஸ் ஆகும் என படக்குழு கூறியிருந்தது.
பொன்னியின் செல்வன் படத்திற்கு ஓரு நாள் முன் திரையிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரீலிஸ் ஆகும் தேதி குறிப்பிடப்படாமல் டீசர் வெளியாகி செப்டம்பர் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து. தனுஷ் ரசிகர்களுக்கு தொடர்ந்து அவரின் படம் வெளியாவது பெரும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. இதனிடையே டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது போன்ற தகவல்கள் மற்றும் மற்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.