முதன் முறையாக கதாநாயகனுக்கு அப்பாவாக நடிக்கும் வைகைப்புயல் வடிவேலு. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்ததில் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்கிறார் வடிவேலு.
நகைச்சுவை உலகின் மன்னனாக இருந்து வந்தவர் வைகைப்புயல் வடிவேலு இன்று வரை அவர் இடத்தை நிரப்ப ஆளே இல்லை. இன்றளவும் நல்ல நகைச்சுவை தந்து ரசிகர்களை மகிழ்விக்க முன்னர் போல் இன்று யாரும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
வடிவேலுவின் காமெடி கலாட்டக்கல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் படத்தின் கதைக்கு கிடைக்கும் வரவேற்பை விட இவர் நடிக்கும் காமெடிக்கு ரசிகர்கள் அதிகம் படத்தின் கதை கைவிட்டாலும் இவரின் நகைச்சுவை பல திரைப்படங்களை காப்பாற்றியுள்ளது.

நடிகர் வடிவேலு கடந்த 1988-ம் ஆண்டிலிருந்து சினிமாத் துறையில் இருந்து வருகிறார். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991-ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் வடிவேலுவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
இதன்பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது காமெடிக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளன. மீம்ஸ் உலகின் மன்னனாக வலம் வரும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார்.
தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாமன்னன் என்ற படத்திலும் சந்திரமுகி 2ம் பாகத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், திரைத்துறையில் 35 ஆண்டு காலத்தில் முதன் முறையாக அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.
மாரிசெல்வராஜ் இயக்கும் இப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு பேசப்படும் எனவும் தகவல் வந்துள்ளது.