அட்லிக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது ஷாருக்கான்

0
9

அட்லிக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது ஷாருக்கான் ஜாவான் படம் குறித்து மனம் திறந்தார். மாஸ் கமர்ஷியல் இயக்குநர் அட்லி எனவும் பாராட்டியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தமிழ் இயக்குநரான அட்லி இயக்கும் ஜாவான் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இதன் மூலம் இந்தி திரைவுலகத்திற்கு அடி எடுத்து வைத்துள்ளார் இளம் இயக்குநர் அட்லி.

தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அட்லி முதல் படமே பெரும் வெற்றியை தந்தது. தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றி படங்களி்ன் மூலம் வசூலை வாரி கொடுத்தவர் அட்லி. இப்படங்களை பார்த்த ஷாருக்கான் இது போன்ற மாஸ் கமர்ஷியல் இணைந்த படங்களில் நான் நடித்ததில்லை அதனால் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

அட்லிக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது ஷாருக்கான்

இந்நிலையில் அட்லி இயக்கும் படமான ஜாவான் படத்தில் நடிக்க ஷாருக்கான் ஓப்பு கொண்டு திரைப்படம் முக்கால் பகுதி முடிந்த நிலையில் உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் இதற்கு முன்னதாக ஜனவரியில் ஷாருக்கானின் பதான் படம் வெளியாகிறது. டிசம்பரில் டுங்கி என்ற படம் வெளியிடப்படுவதாகவும் கருதப்படுகிறது.

அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இதன் மூலம் பாலிவுட்டில் முதல் அடி எடுத்து வைக்க உள்ளார் நயன்தாரா. இதற்கு மத்தியில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவம் வரவில்லை.

ஜாவான் படத்திற்கான ஓடிடி தளத்தை நெட்ப்ளிக்ஸ் பெரும் தொகைக் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. தற்போது ஷாரூக்கான் சினிமாத் துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதையொட்டி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாரூக்கான் பதில் அளித்துள்ளார்.

அட்லீ தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ஷாரூக்கான் அளித்த பதிலில் கூறியதாவது-

ஜவான் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதை குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. நான் அட்லியின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரது படங்கள் மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்ன்மென்ட்டாக இருக்கும். நான் இதுவரை அதுபோன்ற படங்களில் நடித்ததில்லை. இருவரும் இணைந்து ஜவான் படத்தை அளிக்கவிருக்கிறோம். இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என நம்புகிறேன் என கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here