தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு மல்டிப்லக்ஸ்களில் டிக்கட் 75 கிடைக்கும்

0
9

தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு மல்டிப்லக்ஸ்களில் டிக்கட் 75 கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த நிலையில் தேசிய சினிமா தினத்தை செப்டம்பர் 23 க்கு மாற்றி அந்த நாட்களில் மட்டும் மல்டிப்லக்ஸ்களில் ஓரு டிக்கட்டின் விலை 75க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில்  புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.  குறிப்பாக தமிழில் சிலம்பரசன் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு,  அருண் விஜய் நடித்த சினம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

அதேபோல் இந்தியில் ரன்பீர் கபூர் – அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மஸ்திரா திரைப்படம் வட இந்தியாவில் நல்ல வரவேற்புடன் திரையிடப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் விநியோகஸ்தர்கள் மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா அறிவித்த தேசிய சினிமா தின முடிவை ஏற்கவில்லை. அது புதிய திரைப்படங்களின் வசூலை பெரிதும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு மல்டிப்லக்ஸ்களில் டிக்கட் 75 கிடைக்கும்

இதன் காரணமாக தேசிய சினிமா தினத்தை செப்டம்பர் 16ஆம் தேதியிலிருந்து, 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த தேதிக்குள் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் ஒரு வாரத்தை கடந்திருக்கும். அதேபோல் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் இந்த மாத இறுதியில்தான் வெளியாகின்றன.

செப்டம்பர் 23ஆம் தேதியில் தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டால் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கும் என புதிய முடிவை அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here