எம்ஜிஆர் நடித்திருக்க வேண்டிய படம் பொன்னியின் செல்வன் என இயக்குனர் மணிரத்னம் பொன்னியன் செல்வன் பாகம் 1 ன் டீசர் வெளியீட்டு விழாவில் பேச்சு.
இயக்குனர் மணிரத்னம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் சொத்து என்றால் மிகையாகது. ஏனெனில், அவரது படங்களில் புரட்சி, வெற்றி, காதல், நகைச்சுவை, வில்லத்தனம் என அனைத்தும் கலந்த திரைப்படமாக இருக்கும். தனக்கென தனி பாணியில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்திருப்பவர்.
பொன்னியின் செல்வம் திரைப்படம் கல்கி எழுதிய நாவலைத் தழுவியது. இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என 30 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஓளிப்பதிவாளர் ரவிவர்மன், இயக்குனர் மணிரத்னம் என பெரிய பட்டாளத்துடன் களம்கான்கிறது இப்படம்.

பொன்னியின் செல்வம் மாபெரும் பிரம்மாண்ட படத்தின் மூலம் என் நெடுகால கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் எம்ஜிஆர் நடித்திருக்க வேண்டும் எனவும் அவர் எங்களுக்காக விட்டு சென்றுள்ளதாக கருதுகிறோம், என்று டீசர் வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.
கார்த்தி பேசுகையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள கார்த்தி பேசுகையில், நமக்குத் தெரிந்த கொஞ்ச வரலாறில் நாம் எப்படி ஆளப்பட்டோம்? எப்படி சூறையாடப் பட்டோம்? என்று தெரியும். இருந்தாலும் நாம் தமிழன் தமிழன் என்று கூறிக் கொள்கிறோம். அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்டால் பதில் இல்லை. அதை தெரிந்துகொள்வது அவசியம் என கூறினார்.
மேலும், இது ஐந்து மொழிகளில் செப்டம்பர் 30 ல் வெளியாகிறது. மாபெரும் பான் இந்தியா படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்.