கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பிப்ரவரியில் திறக்கப்டுகிறது

0
9

சென்னை அடுத்த வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது இதன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் திறக்கப்படுவது குறித்து அமைச்சர் முத்துசாமி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் இயங்கி வரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தினமும் 8 லட்சம் முதல் 10 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அதிலும் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் நாட்களில் மிக பெரும் அளவில் நெரிசல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட வரியாக தென் மாவட்டங்களுக்கு எளிதாக செல்ல பயணிகளுக்கு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன் உள்ளதாக இருக்கும் என திட்டத்தின்படி 2019 ஆம் ஆண்டு 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது.

கோயம்மேடு பேருந்து நிலையம் திறக்கப்படும் முன் சென்னை பூக்கடையில் பேருந்து நிலையம் இயங்கி வந்தது இடப்பற்றாக் குறையால் கோயம்மேடு பேருந்து நிலையம் 2002 ஆம் ஆண்டு 103 கோடி ரூபாய் மதீப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த இடத்திலும் இடப்பற்றாக்குறை மற்றும் மிக முக்கியமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பிப்ரவரியில் திறக்கப்டுகிறது

இதையடுத்து ஒவ்வொரு மார்க்க வழித்தடங்களுக்கென பேருந்து நிலையங்கள் பொங்கல், தீபாவளி பண்டிகையின் போது பிரித்து இயக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆரணி, வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம், தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பூந்தமல்லியில் தற்காலிக பேருந்து அமைக்கப்படுகிறது.

இது போல் மற்ற ஊர்களுக்கு செல்ல வண்டலூர், தாம்பரம், மாதவரம், கே கே நகர் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பண்டிகை கால கூட்ட நெரிசல் சமாளிக்கப்படுகிறது. மேலும் கோயம்பேடு பகுதிகளில் மெட்ரோ மேம்பால பணிகளாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கென தனி பேருந்து நிலையம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தயாராகி வருகிறது.

இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் 2018 இல் திறக்கப்படும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார். பொங்கல் கழித்து பிப்ரவரி மாதம் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும். இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்வது எளிதாக்கப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here