பாபா ரீ-ரிலிஸில் க்ளைமெக்ஸ் காட்சி மாற்றம் ரசிகர்கள் ஆராவாரம். பாபா திரைப்படம் முழுக்க முழுக்க திரைக்கதையையும் தயாரிப்பையும் ரஜினிகாந்த் உருவாக்கிய படம். 2002ம் ஆண்டு மிகப் பெரும் அரசியல் ஆன்மீகம் கலந்த படமாக ரஜினி கேரியரில் அமைந்த படம்.
நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். அப்போதைய மக்களிடம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான படமாகவும் பாபா படம் அமைந்தது. விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடும் கொடுத்திருந்தார் ரஜினி.
வருகிற 12ம் தேதி ரஜினியின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபா ரீரிலிஸ் செய்ய ஆர்வம் காட்டினார் ரஜினி. இன்றுள்ள தொழில்நுட்பங்களை கொண்டு டிஜிட்டல் முறையிலும் பல காட்சிகளை நீக்கியும் புதிய முறையில் கலரிங் செய்தும் இசையில் பல மாற்றங்கள் கொண்டும் உருவாக்கப்பட்டது.

இப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
பாபா படத்தில் வரும் பாபா முத்திரை இன்றும் பிரபலம். ரஜினியின் டயலாக் முதல் அனைத்தும் பிரபலம் அடைந்தது. இன்று உள்ள இளையதலை முறையினரும் இந்த கதைத்தளத்தை பார்த்து மகிழ்வார்கள் என்று நினைத்து புதிய க்ளைமாக்ஸ் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த க்ளைமாக்ஸ் காட்சியை சற்றும் எதிர்பார்க்காத ரஜினி ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: பாபா படத்தின் ‘சக்தி கொடு’ பாடல் குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து
மாண்டஸ் புயலின் தாக்கத்தால் துவண்டு போன இடங்களில் கூட பாபா ரீரிலிஸ் படத்தை பார்க்க அதிகாலை முதலே ரசிகர்கள் வந்து படத்தை பார்த்து ஆராவாரம் செய்து வந்துள்ளனர். இப்போதாவது இப்படம் பெரும் வெற்றி பெறுமா என்பதை சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2002ஆம் ஆண்டு வெளிவந்த பாபா படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மக்களிடம் செல்வதா அல்லது பாபாவிடம் செல்வதா என்று ரஜினிகாந்த் முடிவெடுத்து மக்களிடம் செல்வது போல் சற்று அரசியல் கலந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ள பாபா படத்தில் அதை மொத்தமாக தூக்கிவிட்டு, மீண்டும் உன்னுடைய தாய் வயிற்றில் மறுஜென்மத்தில் பிறந்து உன் தாய்யின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்று, அதன்பின் நானே உன்னை அழைத்து கொள்கிறேன் என்று ரஜினியிடம், பாபா கூறுகிறார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.