சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலையத்துறையும் அதற்கான அமைச்சர்களும் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். கோயில் சார்ந்த அனைத்தையும் நிர்வகிப்பது அறநிலையத்துறை தான் கோயில் நிலங்கள், கோயில் உண்டியல்,பக்கதர்களின் கோரிக்கைகள், பக்கதர்களின் பாடுகாப்புகள், பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது முதல் கோயில் திட்டங்கள் என பலவற்றையும் கையாளுவது இந்து சமய அறநிலையத்துறையே.

சில தினங்களுக்கு முன்னர் அனைத்து கோவில்களிலும் பிரசாதங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியிருந்தனர். இந்து அறநிலையத்துறையும் அதன் அமைச்சருமான சேகர்பாபு அவர்களே, அத்திட்டத்தை துவங்கியும் வைத்தது சிறப்பு. முதலாக 10 கோவில்களில் இத்திட்டத்தை அமல்படுத்தி பின் அனைத்து கோயில்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.
அதன்படி, இலவச பிரசாதம் வழங்கும் 10 கோவில்கள்
- திருச்செந்தூர் முருகன் கோவில்
- சமயபுரம் மாரியம்மன் கோவில்
- பழனி முருகன் கோவில்
- வடபழனி முருகன் கோயில்
- திருவேற்காட்டு கருமாரியம்மன் கோவில்
- பண்ணாரியம்மன் கோவில்
- திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
- திருத்தணி முருகன் கோவில்
- மருதமலை முருகன் கோவில்
இந்த பத்து கோவில்களில் இலவச பிரசாதமாக தலா 40 கிராம் எடையில் பொங்கல், தயிர் சாதம், லட்டு, புளியோதரை, சுண்டல் உள்ளிட்ட 4 முதல் 6 வகையான உணவுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அடுத்தடுத்து மற்ற கோவில்களிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று 2021-2022ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று நடைபெற்ற இந்தக் கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் அமையவுள்ள இக்கட்டிடம் நான்கு தளங்களாக கட்டப்படுகிறது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.