சர்வதேச புலிகள் கூட்டமைப்பு மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் 10% (264) புலிகள் உள்ளது. ஓன்றிய அரசுடன் இணைந்து அக்டோபர் மாதம் ‘சர்வதேச புலிகள் கூட்டமைப்பு’ மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச புலிகள் தினத்தை ஓட்டி முதல்வர் இவ்வறிப்பினை வெளியிட்டுள்ளார்.
உலக உயிரின விலங்குகளில் அழிவின் விளிம்பில் உள்ளது புலி இனங்கள் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் காட்டின் சங்கிலித் தொடருக்கும் காட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது புலிகள் தான். காடுகளை காக்கும் காவலனாகவும் விளங்குகிறது.

இப்படி காடுகளின் காவலனாக இருக்கும் புலிகள் உலக அளவில் மொத்தம் 3900 மட்டுமே உள்ளது. வேட்டைக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் கொள்ளப்படுவதன் விளைவே புலிகள் குறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதில் வெள்ளை புலி, கறுப்பு நிற கோடுகள் கொண்ட வெள்ளை புலி, கோல்டன் நிற புலி, பாலி டைகர், காஸ்பியன் டைகர், பழுப்பு நிற புலிகள், ஜாவான் புலிகள் என நிறைய வகைகள் உள்ளன.
இவற்றை பாதுகாப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் அனுஷ்டிக்க படுகிறது. 2010இல் ரஷ்யாவில் நடந்த புலிகள் பாதுகாப்பு மாநாட்டில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2022க்குள் புலிகள் உள்ள நாடுகள் அதன் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
இந்தியாவின் தேசிய விலங்கு புலி. 1973 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் புலிகளை பாதுகாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலக புலிகள் எண்ணிக்கையில் 70% இந்தியாவில் தான் உள்ளன. நம் நாட்டில் 51 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. கடந்த ஆண்டு கணக்கின்படி மத்தியப் பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகத்தில் 524 புலிகளும் தமிழகத்தில் 229 புலிகளும் வசிக்கின்றன. மீதமுள்ளவை மற்ற புலிகள் பாதுகாப்பகங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றன.
புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சியாக இந்தாண்டு அக்டோபரில் சென்னையில் மத்திய அரசுடன் இணைந்துசர்வதேச புலிகள் கூட்டமைப்பு மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தும் என குறிப்பிட்டிருக்கிறார்.