மு.க. ஸ்டாலின் அவர்கள் ”சமுதாயத்தின் வலிமை என்பது உடல் மற்றும் மனவலிமையை பொறுத்தது” என கூறினார். சட்டபேரவையில் விளையாட்டுக்கான மானிய கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்தார் தமிழக முதலமைச்சர்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சிறப்பான திட்டமாக அமைய வேண்டும் என்றும் மாணவர்களின் விளையாட்டுகள் அடையாள படுத்தப்பட வேண்டும் என்பதன் நோக்கத்தில் சட்டமன்றத்தில் விளையாட்டு சார்பான அனைத்து திட்டங்களையும் சபாநாயகர் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.

விளையாட்டுக்கான அறிவிப்புகள்
- சென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஓரு ஓலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்.
- 22 கோடியில் ஓலிம்பிக் தங்கப் பதக்க தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும்.
- அனைத்து சட்டமன்றங்களிலும் 3 கோடியில் செலவில் சிறு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும்.
- சிலம்ப விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு வேலையில் 3 சமவிகிதம் இட ஓதுகீடு செய்யப்படும்.
- வடசென்னையில் குத்துசண்டைக்கு தனி மைதானம் அமைக்கப்படும்.
- அலங்காநல்லூரில் ஜல்லி கட்டுக்கு என தனி மைதானம் அமைக்கபடும்.
போதி தர்மரின் மரபணு வழியில் வந்தவர் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்; விளையாட்டை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுகிறார் என்று காங்ரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை பேச்சு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விருப்பம் தனக்கு விருப்பம் உள்ளதாக காங்ரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாக செல்வபெருந்தகை கூறியுள்ளார்.