சியான் விக்ரமின் கோபுரா திரைப்படத்தின் ரீலிஸ் தேதி ஆகஸ்ட் 31ம் தேதி என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவிப்பு வெளியானது.
ரசிகர்களால் செல்லமாக சியான் என்று அழைக்கப்படும் விக்ரம் திரைப்படங்களுக்கென தமிழ் திரையுலகில் தனி ரசிகர்கள் உண்டு. விக்ரம் மிக பிரபலாமான நடிகராக வலம் வருபவர். விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பதற்கு இன்று வந்தாலும் தந்தை இடத்தை பெற முடிவது மிக கடினம்.
விக்ரம் தனது படங்களில் காட்சிகளில் என அனைத்திலும் விறுவிறுப்பாக நடித்திருப்பார். மேலும், படங்களுக்காக மிகவும் மெனக்கடல்கள் இருக்கும். தில்தில், சாமி, அருள், கந்தசாமி, ஐ என பல ஹீட் படங்களில் நடித்து பெரும் பெயரையும் ரசிகர்களையும் பெற்றவராக உள்ளார்.

இந்நிலையில், மிகவும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கோப்ரா இப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியீடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை ரசிகர்கள் டிவிட்டரில் டிரன்டிங் செய்து வருகின்றனர்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’. ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கேஜிஎஃப்’ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்திருக்கிறார் என சொல்லப்பட்டது.’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் தான் கோப்ரா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. கோப்ரா படத்தின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.