கோவையை சார்ந்த TTF வாசன் விரைவில் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

0
7

கோவையை சார்ந்த TTF வாசன் விரைவில் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TTF வாசன் யார் என்று பலரும் அறியாதவர் ஆனால் 2K கிட்ஸிற்கு மட்டும் தெரிந்துள்ள நபர். கோவையை சார்ந்த டிடிஎப் வாசன் 23 வயதாகிறது. இவர் விலை உயர்ந்த பைக்கில் பயணங்கள் செய்வது மட்டும் இல்லாமல் பைக்கில் பல சாகசங்களையும் லைவ்வாக வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் போடுபவர்.

தற்போது, அவர் ஓரு விலை உயர்ந்த பைக்கில் சுமார் 250 கிலோ மீட்டர் ஸ்பீடில் லைவ் வீடியோ போட்டு உள்ளார். இது இன்று பேசு பொருளாகவும் கண்டனத்திற்கு உரியதாகவும் மாறியுள்ளது. சிறார்களின் மனதில் பைக் சாகசங்கள் செய்ய தூண்டும் வகையிலும் செயல்படுவதால் அவர் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கோவையை சார்ந்த TTF வாசன் விரைவில் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கோவையை சேர்ந்த வாசன் என்ற இளைஞர் பைக்கில் அதிக வேகத்தில் சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து Twin Throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இவர் வெளியிடும் வீடியோக்கள் பைக் மீது ஆர்வம் கொண்ட சிறுவர்கள், இளைஞர்களுக்கு பிடித்துவிட படிப்படியாக இவரது சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.

தற்போது இவரது யூடியூப் சேனலுக்கு இருக்கும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 27 லட்சம். இருசக்கர வாகனத்திலேயே பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இவர் பைக் சாகசங்கள் மட்டுமின்றி தனது பயண அனுபவங்களையும் VLOG ஆக பதிவிட்டு வந்தார். இவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இப்படி யூடியூப்பில் உச்சத்துக்கு சென்ற இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களையும் வாங்கி சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது பிறந்தநாளை சப்ஸ்க்ரைபர்சுடன் கொண்டாட முடிவெடுத்தார். இதனால் அவர் வரும் சாலையில் கூட்டம் கூடியது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அதனால் போலீசார் அவரை சீக்கிரம் கலைய சொன்னார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here