காமன் வெல்த் வாள் வீச்சு போட்டியில் தங்கம் வென்றார் பவானி தேவி

0
16

காமன் வெல்த் போட்டியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீராங்கனை பவானி தேவி வாள் வீச்சு போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பவானி தேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

காமன் வெல்த் வாள் வித்தை போட்டியில் தங்கம் வென்றார் பவானி தேவி

இதையடுத்து தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சீனியர் வாள்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்துகொண்டார். இவர் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை எதிர்கொண்டார்.

இந்த வாள்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் அவரை வீழ்த்தி இந்திய வீராங்கனை பவானி தேவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த ஓலிம்பிக் போட்டியில் முதல் இந்திய வாள் வீச்சி போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பவானி தேவி. ஓலிம்பிக் போட்டியில் போராடி 2வது சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறினார்.

இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டி வாள் வீச்சில் தங்கம் வென்றது புது உத்வேகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here