குக்கு வித் கோமாளி சீசன் 3ன் டைட்டில் வின்னர் இவர் தான்

0
88

குக்கு வித் கோமாளி சீசன் 3ன் இறுதி கட்டப்பட பிடிப்பு மற்றும் டைட்டில் வின்னர் முந்துள்ளது. டைட்டில் வின்னராக மறைந்த பழம்பெரும் நடிகரின் பேத்தி வென்றுள்ளார்.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் அனைத்து மக்களையும் மிகவும் கவர்ந்த ஓரு நிகழ்ச்சி என்றால் அது குக்வித் கோமாளி தான் என்றால் மிகையாகாது. விஜய் டிவியின் டிஆர்பி ஏறவும் வழிவகை செய்தது. மக்களுக்கு சிறந்த சிரிப்பு மருத்துவனாக இருந்த நிகழ்ச்சியாக இருக்கிறது.

ஓரு சமையல் நிகழ்ச்சி இவ்வளவு மக்களால் பேசப்படும் நிகழ்ச்சியாக உள்ளது என்றால் எந்தளவுக்கு அது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். விஜய் டிவி வழங்கும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசன் சிறப்பான வெற்றியை தந்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது சீசனும் மிக சிறப்பான வெற்றியை பெற்றது. மக்களின் விருப்பத்தால் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டு இப்போது முடியும் தருவாயில் வந்துள்ளது.

குக்வித் கோமாளி இந்த அளவில் வெற்றி பெற்றுள்ளது என்றால் கோமாளியின் பங்கு இதில் ஏறாலம். இந்நிலையில், 3வது சீசனிலும் மாறாமல் இருப்பது சமையல் நிபுணர்களான மாஸ்டர் தாமு மற்றும் வெங்கடேஷ்பட் தொகுப்பாளர் ரக்ஷ்ன். 3வது சீசனில் குக்குகளாக அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா,ரோஷினி, ஸ்ருதிகா, அம்மு அபிராமி, தர்சன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

குக்கு வித் கோமாளி சீசன் 3ன் டைட்டில் வின்னர் இவர் தான்

அதேபோல் கோமாளியாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். கடந்த இரண்டு சீசனை விட மூன்றாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் பல வித்தியாசமான கான்செப்ட்களை கொண்டு வந்து இருந்தார்கள்.

மேலும், பல வாரங்களை கடந்து இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு ஸ்ருதிகா, தர்சன், அம்ம அபிராமி, வித்யூலேகா சென்றிருக்கிறார்கள். கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3ன் வைல்ட் கார்டு சுற்று நடைபெற்று இருந்தது. இறுதியில் வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்சன், அம்மு அபிராமி, சந்தோஷ்,கிரேஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். தற்போது நிகழ்ச்சியின் கடைசி ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திபனிடம் பேட்டி எடுக்கப்பட்டு இருந்தது.

அதில் அவர் கூறியிருந்தது, வழக்கம் போல இந்த சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. கடந்த வாரம் ஷூட்டிங் நடந்தது. வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்சன், அம்மு அபிராமி, சந்தோஷ்,கிரேஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள்.

இதில் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும், நடிகையுமான ஸ்ருதிகா சிறப்பாக சமைத்து டைட்டில் வின்னர் வென்றிருக்கிறார். நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் என எதிர்பார்கக்ப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here