டெல்லி: தலைநகரான டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் எனவும் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தலைநகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரத்து வருகின்றது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் மருத்துவ நிபுணர்கள் மக்கள் பொது இடங்களுக்கு வருபவர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க அரிவுத்தப்பட்டுள்ளது.
கவனிக்க: கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2020ம் ஆண்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தடுப்பூசி மற்றும் தனிநபர் இடைவெளி, மாஸ்க், கையுறை, சேனிடைசர் என அனைத்தையும் மக்கள் பயன்படுத்தியும் வந்து தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டு உள்ள இந்நிலையில், திரும்பவும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது கவலை தருவதாக உள்ளது.

என்ன தான் தடுப்பூசி பெருமளவில் போடப்பட்டாலும் தற்போது சில நாட்களாக கொரோனா வைரசானது மீண்டும் நாட்டில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதேபோல் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்றம் கண்டு வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்லும் போது, இணை நோய்கள் மற்றும் புற்றுநோய், காசநோய் பாதிப்புடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து டெல்லி அரசு முககவசம் அணிவது கட்டாயம் எனவும் அணியாவதவர்களுக்கு 500 விதிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.