உலக நாடுகளை பல நாட்களாக அச்சுறுத்தி பல உயிரிழப்புகளை தந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி பல இன்னல்களை சந்தித்தது. அதிகப்படியான உயிரிழப்புகளை தந்தது இதனால் பல நாடுகள் பொது மடக்த்தை அமல் படுத்தியது. பின்னர், இதற்கு தடுப்பூசி போன்றவை கண்டுப்பிடிக்கப்பட்டு மெல்ல மெல்ல தொற்றிலிருந்து விடுப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மீண்டும் சீனா, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வருகின்றது. இதையடுத்து இந்தியாவில் இதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிவகைகளை செய்ய உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 242 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 408 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 680 ஆக உள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 220.01 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?
தற்போது சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த மூன்று மாதத்தில் சீனாவில் 60 சதவீத மக்களுக்கு தொற்று பெருகும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.