கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. சீசனுக்கு வரும் விருந்தாளியைப் போல கொரோனா வைரஸ் அப்பப்போது வந்து மக்களை வருத்தமுற செய்கிறது.
பல நாடுகளில் இப்போது தான் கொரோனா சார்ந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது. அதற்குள்ளாக மீண்டும் COVID 19 தலைதூக்கி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

இந்தியாவில் கொரோனா தாக்கம் இல்லாத நாடாக மாறிக் கொண்டு இருந்த நிலையில் மத்திய அராசாங்கமும் கொரோனா கட்டுப்பாடுகள் நாடு முழவதுமாக விலக்கி கொண்டது. தற்போது மீண்டும் COVID 19 தாக்கம் சற்றே அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக நடுவன் அரசு தெரிவித்துள்ளது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்: தடுப்பூசியின் நன்மைகள்
அதன்படி தற்போது ஆங்காங்கே கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 241 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக 2,451 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 1,589 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் ஐஐடி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிட தக்கது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் கூறியதாவது, மக்கள் மிகவும் பாதுகாப்பாகவும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். முககவசம், சமுக இடைவெளி, சானிடைசர் பயன்பாடு இதனை பின்ப்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.