இந்தியா இங்கிலாந்து இடையே முதல் டி20 போட்டியில் அசத்தலான வெற்றி பெற்றது இந்தியா

0
11

இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அசத்தலான வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்திய அணி, டெஸ்ட, டி20, ஓருநாள் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

இந்நிலையில், T20 போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே முதல் போட்டி சவுத்தாம்டன் ஏஜியஸ் பவுலில் நேற்று நடைப்பெற்றது. இந்திய அணியின் சீனியர்களான விராத் கோலி, ஜடேஜா, பூம்புரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. டி20 க்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார்.

இந்தியா இங்கிலாந்து இடையே முதல் டி20 போட்டியில் அசத்தலான வெற்றி பெற்றது இந்தியா

முதலில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தீர்மானித்தது. ஓப்பனர்களாக ரோஹித்தும் இஷான் கிஷனும் இறங்கினர். இருவரும் மொயின் அலியின் பந்தில் அவுட்டாகினர். ரோஹித் 24 ரன்னும் கிஷன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், தீபக் ஹீடா 17 பந்தில் 33 ரன் சேர்த்து ஜேர்டன் பந்தில் அவுட்டானார். சூரியக்குமார் யாதவ் 19 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஜேர்டன் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ஹர்த்திக் பான்டியா நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி 33 பந்தில் 51 ரன் எடுத்து டாப்லி பந்தில் அவுட்டானார். படேல் 12 பந்தில் 17 ரன்னும் தினேஷ் கார்த்திக் 7 பந்தில் 11 ரன்னும் எடுத்தனர் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னிலும் ஆட்டமிழந்து இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 198 ரன்கள் எடுத்திருந்தனர்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து வீரர்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். பட்லர் டக் அவுட்டானார். மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்து ஆட்டமிழந்தனர். மொயின் அலி அணியின் அதிகபடியாக விளையாணி 36 ரன் சேர்த்தார். பவுலிங்கில் புவனேஷ்குமாருக்கு 1 விக்கெட்டும், சிங்கிற்கு 2 விக்கெட்டும், பாண்டியா 4 விக்கெட்டும், பட்டேல் 1 ம் சாஹல் 2 விக்கெட்டும் எடுத்து அசத்தி இங்கிலாந்து அணியின் ஆட்டக்காரர்களை திக்குமுக்காடச் செய்தனர்.

ஆட்ட நாயகனாக பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் கலக்கிய ஹர்த்திக் பாண்டியா வென்றார். அவர் 33 பந்தில் 51 ரன்னும், பவுலிங்கில் 4 ஓவர்க்கு 33 ரன்கள் கொடுத்தும் 4 விக்கெட்களை வீழ்த்தியும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here