கேஜிஎஃப்: கன்னட நடிகர் யாஷ் கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 மூலம் உலகளவில் பிரபலமானவர். கேஜிஎஃப் படம் மூலம் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தையே கொண்டிருப்பவர் நடிகர் யாஷ். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவரை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் ஃபாலோ பண்ணும் ரசிகர்கள் ஏராளம். மேலும் யாஷ் கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு பெரிய பட வாய்ப்புகள் வந்தும் எந்த படத்திலும் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மீதான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு அதிகம் உள்ளதால் கதையை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக உள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் யாஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருணல் பாண்டியா ஆகியோருடன் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ‘கேஜிஎஃப்3’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணல் பாண்டியா இருவரும் ‘கேஜிஎஃப் 3’ ல் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கேஜிஎஃப் 3 வெளிவருவது உறுதி என்றும் அதுதான் யாஷ் நடிக்கும் அடுத்த படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே இர்ஃபான் பதான் சமீபத்தில் வெளியான ‘கோப்ரா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். வேறு சில கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடித்துள்ள நிலையில் ஹர்திக் மற்றும க்ருணல் ஆகிய இருவரும் ‘கேஜிஎஃப் 3’ படத்தில் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.