FIFA WORLD CUP 2022: போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து அணியின் தூணாக விளங்கிய கிஸ்டியானோ ரொனால்டோ அவ்வணிக்கு உலக கோப்பை கால்பந்து விருதை பெற முடியாமல் வெளியேறும் நிலையில் கண்ணீருடன் உருகுலைந்து நின்றார்.
22 வது ஃபிஃபா உலக கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்டு கோப்பையை வெல்ல பல நாட்டு கால்பந்து வீரர்கள் களம் இறங்கினர். மேலும், வலுவான அணியாகவும் அனைவராலும் இந்த உலக கோப்பையை வெல்லும் அணிகளாக பார்க்கப்பட்ட பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் காலிறுதி போட்டியுடன் வெளியேறி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை வழங்கியது.
தலைசிறந்த கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் அர்ஜெண்டினா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், காலிறுதிக்கு முந்தைய போட்டியில் போர்ச்சுக்கல் அணி சுவிசர்லாந்து அணி்க்கு எதிரான போட்டியின் பாதி ஆட்டம் வரை ரொனால்டோ பென்சில் அமர வைக்கப்பட்டார். இவருக்கு பதிலாக ராமோஸ் களமிறங்க்கி விடப்பட்டார். அவரும் அந்த போட்டியில் 3 கோல்களை அடித்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து காலிறுதி போட்டியில் மொரோக்கா அணியுடனும் முதல் ஆட்ட பாதியில் ரொனால்டோ பென்சில் அமர வைக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக ஓரு கோல் கூட போர்ச்சுக்கல் அணியால் அடிக்க முடியாமல் போனது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் களமிறக்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டாவால் கோல் அடிக்க முடியாமல் துவண்டு போனார்.
இதனால் அந்த போட்டியில் 1 கோல் அடித்து முன்னிலையில் இருந்த மொரோக்கா அணி போர்ச்சுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. போர்ச்சுக்கல் அணி இந்த முறையும் கோப்பை வெல்ல முடியாமல் வெளியேறியது. இந்நிலையில், ரொனால்டோ மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுது வெளியேறினார்.
போர்ச்சுக்கல் அணிக்காக பல கோப்பைகளை வென்று தந்துள்ள ரொனால்டோ உலக கோப்பையை பெற முடியாமல் போனாதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உருக்கமாக வெளியேறினார். இது நாட்கள் வரை போர்ச்சுக்கல் நாட்டு ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி என தெரிவித்து வெளியேறினார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.