கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்நஸர் க்ளப்புடன் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை சவூதி அரேபியாவின் அல்நஸர் க்ளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து உலகின் நட்சத்திரமாக இருந்து வந்த ரொனால்டோ யுனிடெட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை ஓப்பந்தம் செய்ய கடும் போட்டி நிலவி வந்தது. அதில் சவூதி அரோபியாவின் அல்நஸர் அணி இவரை பல கோடியை கொடுத்து ஓப்பந்தம் செய்துள்ளது.
சமீபத்தில் கிஸ்மஸ் பண்டிகையின் போது அவரது மனைவி அவருக்கு விலைவுயர்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் டான் காரை பரிசாக கொடுத்து சர்ப்ரைஸ் தந்தார். அதன் மதிப்பு 7 கோடி என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் புதிய ஜெர்சியுடன் புகைப்படத்துடன் இருக்கும் ரொனால்டோ 2025 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக விளையாட ஓப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது சவூதி அரேபியா போன்ற நாட்டு மக்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் இளைம் வீரர்களுக்கு உந்துதலாகவும் இருக்கும் என சவூதி அரேபியா கால்பந்து அணி தெரிவித்துள்ளது.
இதற்காக அவருக்கு 200 மில்லியன் யூரோக்களை (1,775 கோடி இந்திய மதிப்பில்) சவுதி அரசு கொடுக்க உள்ளது. 2025 பிறகு அந்த அணியின் தூதுவராக செயல்பட போவதாக, போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மார்கா எனும் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நாளை ஜனவரி ரொனால்டோ ஒப்பந்த கையெழுத்திற்காக சவுதி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கையும் சொத்து மதிப்பும்
இது போன்ற தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.