கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓரு கால்பந்தாட்ட வீரர் ஸ்பானிஷ் கிளப் ரியல் மாட்ரிட் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் போர்த்துகீசிய தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் கால்பந்து உலகின் ஜாம்பாவானாக இருந்து பல வெற்றியையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இன்றைய உலகில் கால்பந்தின் உச்சம் எனப் புகழ்ப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரின் வாழ்க்கையும் சொத்து மதிப்பையும் இந்த பதிவின் மூலம் அறியலாம்.
ரொனால்டோவின் பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்வு:
கிறிஸ்டியானோ பிப்ரவரி 5, 1985 அன்று போர்ச்சுகலின் ஃபஞ்சல் மடிராவில் பிறந்தவர். இவருக்கு முன்னே சகோதர சகோதரிகள் இருக்கின்றனர். இவரை அவரது தாய் கருவூற்றிருந்த பொழுது கலைக்க நினைத்து முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த முயற்சி கைவிடப்படவே இந்த கால்பந்து உலகிற்கு புதிய சகாப்தவாதி கிடைத்தார். குடும்ப வறுமையில் வாடியது தந்தை தோட்டக்காரராக பணிப்புரிந்து வந்தார்.
பின்னர், கால்பந்து கிளபில் அவரது தந்தைக்கு வேலைக் கிடைக்கவே அவ்வப் போது சென்று தந்தையுடன் சென்று வந்துள்ளார் ரொனால்டோ அப்போது அங்கு கால்பந்து விளையாடும் நபர்களை பார்த்து ஆர்வம் ஏற்படவே தந்தையிடம் கூறி அனுமதி பெற்றுள்ளார்.

குடும்ப வறுமையின் நடுவே வீட்டில் கிடைந்த அழுக்கு நிறைந்து கிழ்ந்த நிலையில் இருந்த ஷூ ஓன்றை போட்டுக் கொண்டு முதன் முறையாக கால்பந்து மைதானத்திற்கு சென்றார். அப்போதிலிருந்தே தன்னை முழுமையாக கால்பந்து வீரனாக தீர்மானித்த ரொனால்டோ அனைவரின் கவனத்தையும் திருப்பினார். அவருக்கு 11 வயதிருக்கும் போதே தனக்குள் இருக்கும் கால்பந்து வீரனை உலகிற்கு அறிமுகப்படுத்தி அசத்தினார்.
தனது 12 வயதில் கால்பந்து கிளப்பில் சேர்ந்து சிறப்பான விளையாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தினார். பள்ளி படிப்பில் நாட்டம் குறைந்து கால்பந்தில் நாட்டம் ஈர்த்தது. சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் பேரிடி விழுந்தது.
ரொனால்டோவிற்கு நேர்ந்த சோகம்:
அவரது 15 வயது இருக்கும் போது இதயத் துடிப்பு சீராக இல்லை என்ற காரணத்தால் மருத்துமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு மருத்துவர் அறுவை சிகிச்சை மேற் கொண்டால் எவ்வித பிரச்சனையும் இருக்காது. அதே போல அறுவை சிகிச்சை மேற் கொள்வதால் நீ உயிர் பிழைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில், அறுவை சிகிச்சை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் நீ குதிக்கவோ, ஓடவோ, கால்பந்து விளையாடவோ கூடாது என்றார்.
ரொனால்டோ அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உடல்நலம் தேறியது. இதனால் இன்று உலகம் அறியும் நபராக உருவெடுத்தார்.
கால்பந்தாட்டத்தில் உச்சம்:
அதன்பிறகு ஸ்போர்டிங் சிபி என்ற கிளப்பிற்காக விளையாடி வந்த ரொனால்டோ, முதல் முறையாக 2003ம் ஆண்டு மேன்செஸ்டர் யுனைடெட் என்ற பெரிய கிளப்பில் இணைந்தார். அப்போது அவருக்கு வயது 18 தான். அவரின் முதல் சீசனிலேயே எஃப்ஏ கோப்பையை வென்றார். அதன் பிறகு சாம்பியன்ஸ் லீக், ஃபிஃபா உலகக்கோப்பை என தொடர்ச்சியாக 3 முறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார்.
இவற்றின் பலனாக 23வயதில் தன்னுடைய முதல் பலோன் டி ஆர் விருதை வென்றார். இது கால்பந்து விளையாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாகும். இதுதான் ரொனால்டோ வாழ்கையின் 2வது அதியாயம் என்று கூறலாம். 2009ம் ஆண்டு ரியல் மெட்ரிட் அணிக்கு 94 மில்லியன் ஈரோ டாலருக்கு ( சுமார் ரூ. 834 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் மூலம் உலகின் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதையும் படியுங்கள்: ரொனால்டோவுக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து அசத்திய அவரது மனைவி
இந்த அணியில் இணைந்தவுடன் லா லீக் தொடர், கோபா தொடர் என அடுத்தடுத்து 15 கோப்பைகளை வென்று கொடுத்து ஒட்டுமொத்த கால்பந்து உலகின் கவனத்தை பெற்றார். மேலும் 2013, 2014, 2016, 2017 என தொடர்ச்சியாக பலோன் டி ஆர் விருதுகளை தட்டிச்சென்றார். ரியல் மெட்ரிட் அணிக்காக 9 வருடங்கள் விளையாடிய ரொனால்டோ, 2018ம் ஆண்டு ஜுவாண்டஸ் அணிக்காக 100 மில்லியன் ஈரோப்பியன் டாலருக்கு ( சுமார் ரூ.850 கோடிக்கு) ஒப்பந்தம் ஆனார். 30 வயது வீரர் ஒருவர் இவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் ஆனது அனைவருக்கும் ஆச்சரியமானது. அதன் பிறகு தற்போது மீண்டும் தனது தாய் கிளப்பான மேன்செஸ்டர் யுனெட்டெட்டிற்கே திரும்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்: கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சொத்து மதிப்பு
இதுவரை 5 பல்லோன் டி ஆர் விருதுகள், 4 ஐரோப்ப கோல்டன் ஷூஸ், 32 சாம்பியன் கோப்பைகளை வென்று கொடுத்த ரொனால்டோவின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.4,250 கோடி ஆகும். இதன் மூலம் அயல்நாடுகளில் கால்பந்து எவ்வளவு முக்கியமான விளையாட்டாக உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளவும் முடிகிறது.
இதையும் படியுங்கள்: Ms Dhoni: சொத்து மதிப்பு மற்றும் அவரிடம் உள்ள கார்களின் விபரம்
ரொனால்டோவிடம் உள்ள கார்களின் விபரம்:
Porsche 911 டர்போ எஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்65, மெக்லாரன் சென்னா, பென்ட்லி கான்டினென்டல், புகாட்டி வெய்ரான் கிராண்ட் ஸ்போர்ட் வைடெஸ்ஸி, செவ்ரோலெட் கமரோ இசட்எல்1, ஃபெராரி மோன்சா எஸ்பி1, ஃபெராரி 599 ஜிடிஓ, ரோல்ஸ் ரொய்ஸ் 3ஏஎம், ரோல்ஸ் ராய்ஸ் 6எல்இ RS7, Bugatti Chiron, Mercedes-Benz Brabus G65, Ferrari F430, Bugatti Centodieci மற்றும் ஒரு மஸராட்டி கிரான்கேப்ரியோ என இத்தனை கார்களை தனது சேகரிப்பில் வைத்துள்ளார் ரொனால்டோ.
ரொனால்டோ ஓரு கார் காதலர் ஆதலால் தான் இந்த வருட கிறிஸ்மஸிற்கு அவரது மனைவி அவருக்கு சர்ப்ரைசாக ரோல்ஸ் ராயல்ஸ் காரை பரிசாக கொடுத்து மகிழ்வித்தார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.