செம்பி திரைப்படத்தில் விஜய் டிவியின் குக்வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் கண் கலங்கி பேசியுள்ளார்.
விஜய் டிவியில் பொழுதுப்போக்காக ஆரம்பித்த நிகழ்ச்சி குக்வித் கோமாளி சமையல் செய்யும் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்ற பெருமை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்குகளும் கோமாளிகளும் தான் மிக முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. இந்த நிகழ்ச்சி தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.
அந்த அளவிற்கு மக்கள் விரும்பும் நிகழ்ச்சியாக உருவெடுத்தது. அந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் அஸ்வின் இவருக்கு தனி ரசிகர் படையே இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்கள் இந்த நிகழ்ச்சியில் வரும் அஷ்வினை காண இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஷ்வின் குக்வித் கோமாளி பாகம் 2ன் மூலம் பிரபலம் அடைந்தார். பின்னர், வெப் சீரியஸ், ஆல்பம் என நடித்திருந்தார். விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகும் இரட்டை வால் குருவி போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். ஓ காதல் கண்மணியே, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறிய ரோல்களிலும் நடித்துள்ளார்.
முதன் முதலாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தப் படம் ‘என்ன செய்ய போகிறாய்’ இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார். இயக்குனர் ஹரிஹரன் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று குக் நடித்து இருந்தார்கள்.
ஆனால், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், பல சர்ச்சைகளுக்கு பின் இந்த படம் வெளியாகி இருந்தது. இப்படம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மைனா, கும்கி, கயல் என ஹூட் படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி என்ற படத்தில் அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்துவந்த அவர், இப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை பார்த்திராத புதிய வேடத்தில் அவர் நடித்துள்ளாராம்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜீவன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஷ்வின் கண் கலங்கி பேசினார். இவ்விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டிருந்தார்.