செஸ் ஓலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் மோடியை நேரில் சென்று அழைக்க முடிவு வருகின்ற 19 ம் தேதி தமிழக எம்.பிக்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் செஸ் ஓலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை பிரதமருக்கு நேரில் சென்று வழங்கி அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக் காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், பல அரசியல் தலைவர்களும் அவரை விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாரத பிரதமரும் தமிழக முதல்வருக்கு தொலைபேசி மூலம் அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு முதல்வர் செஸ் ஓலிம்பியாட் போட்டிக்கு அழைப்பு விடுத்தார். நேரில் வந்து அழைக்க முடியாதையும் அவரிடம் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் வரும் ஜூலை 28-ம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டி.ஆர். பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், CHESS OLYMPAID போட்டிக்கு WELCOME பாடல் ஓன்றை தயாரித்து அதனை டீசராக வெளியிட்டு உள்ளனர். இப்பாடலில் தமிழக முதல்வர் இடம் பெற்று அனைவரையும் போட்டிக்கு அழைப்பதாக நடித்துள்ளார். இது தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. போட்டிக்கு அனைத்து நாட்டு போட்டியாளர்களும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.