டெல்லி: துவாரகா பகுதியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவியின் மீது ஆசிட் வீசப்பட்ட விவகாரத்தில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விசாரித்ததில் ஆசிட் ஆன்லைன் வழியாக வாங்கப்பட்டதை கூறியுள்ளனர். இதை அடுத்து ஆன்லைன் வழியாக ஆசிட் விற்பனை செய்வதை தடை கோரியும் விளக்கம் கேட்டும் அமேசான், ப்ளி்ப்கார்டு நிறுவனங்களுக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
17 வயதான மாணவியும் அவரது சகோதரியும் பேருந்துக்காக காத்திருந்த போது மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு மர்ம நபர்கள் மாணவி மீது ஆசிட் வீசியுள்ளார். வலியால் துடித்துடித்த அந்த பெண்ணை மீட்டு சப்தர்ஜங் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவரது சகோதரியிடம் விசாரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.சச்சின் அரோரா(வயது20) என்ற இளைஞர் அந்த மாணவியை காதலித்துள்ளார். ஆனால், அந்த மாணவி காதலுக்கு மறுத்துள்ளார். இதையடுத்து, தனது நண்பர்கள் ஹர்சித் அகர்வால்(வயது19), வீரேந்திர சிங்(22) ஆகியோரின் உதவியுன் அந்த மாணவி மீது ஆசிட்டை வீசியுள்ளார்.

அவர்களை விசாரித்ததன் பேரில் ஆசிட் ப்ளிப்கார்ட்டில் சச்சின் அரோரா தனது இவாலட் மூலம் வாங்கியுள்ளார். பிளிப்கார்ட் தளத்தில் சச்சின் அரோரா தனதுஇ வாலட்டைப் பயன்படுத்தி ஆசிட் வாங்கியுள்ளார். 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஆசிட்டை யாரும் சில்லறையில் விற்பனை செய்யக்கூடாது. ஆசிட் விற்பனை செய்ய உரிமம் பெற்ற கடை உரிமையாளர்கள்தான் ஆசிட்டை விற்க வேண்டும் என விதிகள் வகுத்துள்ளது.
அதையும் மீறி அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட்டில் ஆசிட் விற்பனை மிக எளிமையாக கிடைப்பதை டெல்லி மகளிர் அணையம் கண்டிப்பதுடன் ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படியுங்கள்: உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.