காற்று மாசு உலகளவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்திய நகரங்கள்

0
9

காற்று மாசு உலகளவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்திய நகரங்கள் டெல்லி முதலிடத்திலும் இரண்டாம் இடத்தை கொல்கத்தாவும் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹெல்த் எஃப்க்ஸ்ட் இன்ஸ்டியூட் நடத்திய ஆய்வுப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை இந்திய நகரங்களான டெல்லியும் கொல்கத்தாவும் பிடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பட்டியலில் மும்பை நகரம் 14வது இடத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாட்டின் தலைநகராக விளங்கும் டெல்லி காற்று மாசு மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. டெல்லி அரசும் காற்று மாசு குறைக்க பல நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் மக்கள் தொகை பெருக்கம் தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம் என பல குற்றச்சாட்டுகளும் பெற்று வருகிறது.

காற்று மாசு உலகளவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்திய நகரங்கள்

காற்றில் பிஎம் 2.5 நுண்ணிய துகள்கள் அதிகம் கலந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, கொல்கத்தா, கனோ, லிமா , டாக்கா, ஜகர்தா, லாகோஸ், கராச்சி, பெய்ஜிங் மற்றும் அக்ரா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகளவில் 7500 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் டெல்லி தான் முதன்மை நகரமாக அமைந்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக டெல்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

அதுவும் குளிர் காலங்களில் மேலும் மோசமடைந்து விடுகிறது. மக்களின் உடல்நலனோடு நேரடி தொடர்பு கொண்ட காற்று மாசுபாட்டை குறைக்க மக்களும், அரசும், உலக நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here