இன்று நவம்பர் 25 திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியான படங்கள் விபரங்களை இப்பதிவில் காணலாம்.
நவம்பர் மாதம் முதலே பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளியாகி நல்ல வெற்றியை ரசிகர்களின் மத்தியில் பெற்று வந்ததது. அந்த வரிசையில் இன்று திரையர்ங்குகளில் நடிகர் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம், இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாரின் நடிப்பில் உருவான காரி திரைப்படம், நடிகர் அதர்வா மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் உருவான பட்டத்து அரசன், பவுடர் என்ற திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளை அலங்கரித்தன.
அதேபோல, இன்று அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், சோனி லிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள் இதோ.

காந்தாரா: இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடியில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி உள்ளது.
ப்ரின்ஸ்: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ப்ரின்ஸ் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
சுப் ( CHUP ) : ஹிந்தியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ’சுப்’ இன்று ஜீ5-ல் வெளியாகியுள்ளது. இது ஒரு மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும்.
மீட் க்யூட் : தெலுங்கில் வெளியான ஆந்தாலஜி படமான ‘மீட் க்யூட்’ சோனி லிவில் இன்று வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: லவ் டுடே திரைப்படம் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது
இது போன்ற பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.