இலங்கைக்கு எதிரான 20ஓவர் தொடரில் இந்திய வீரர்களின் விபரம்

0
15

இலங்கைக்கு எதிராக இந்தியா 3 ஓருநாள் தொடர் மற்றும் 2 டி20 தொடரில் பங்கு கொள்கிறது. இதற்கான போட்டிகள் வருகிற ஜனவரி மாதத்தில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்நிலையில், 20 ஓவர் போட்டியில் பங்கு பெறும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

அடுத்த ஆண்டு உலக கோப்பை ஓருநாள் தொடர் நடைபெற இருக்கின்றது. இதற்காக இந்திய அணி அனைத்து நாட்டு வீரர்களுடனும் பயிற்சி மேற் கொள்ளவும் தங்களின் திறமையை நிலைநாட்டும் வண்ணமும் தொடர்ந்து தொடர்களில் பங்கு பெற்று வருகிறது.

கடந்த வங்கதேச தொடரில் ஓருநாள் தொடரை இந்திய அணி பெற முடியாமல் போனாலும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆறுதல் அடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டிகள் இந்திய மண்ணில் தொடங்க உள்ளன. அதற்கான ஓருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹூத்தையும் டி20 தொடருக்கு ஹர்த்திக்கையும் கேப்டனாக நியமித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இலங்கைக்கு எதிரான 20ஓவர் தொடரில் இந்திய வீரர்களின் விபரம்

டி20 தொடருக்கான் இந்திய அணி வீரர்களின் விபரம்

ஹரதிக் பாண்ட்யா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷண், ருத்ராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.

முதல் டி20 போட்டி ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த டி20 போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: இலங்கைக்கு எதிரான ஓருநாள் தொடரில் இந்திய அணி வீரர்களின் விபரம்

இந்த போட்டியில் நீண்டநாள் கோரிக்கையான சஞ்சு சாம்சனை களம் இறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டி20 போட்டிக்கு ஹர்திகை கேப்டனாக அறிவித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here