இலங்கைக்கு எதிரான ஓருநாள் தொடர் வருகின்ற புதிய ஆண்டில் தொடங்குகிறது. இதில் ஓருநாள் தொடரில் பங்கு கொள்ளும் இந்திய அணி வீரர்களின் விவரங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய அணி வங்கதேச நாட்டிற்கு சென்று ஓருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கு பெற்றது. இதில் ஓருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற வெற்றி கணக்கில் வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இதற்கடுத்ததாக இலங்கை அணியுடனான தொடர்களில் பங்கேற்க உள்ள இந்திய அணி ஓருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களிலும் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில், ஓருநாள் தொடருக்கான கேப்டனாக ரோஹூத் சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் வங்கதேசத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெறாமல் ஓய்வு பெற்றிருந்தார். தற்போது மீண்டும் இலங்கைக்கு எதிரான ஓருநாள் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

ஓருநாள் தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல்
ரோஹூத் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீப்பர்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்.), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ந் தேதி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் ஜனவரி 12ந் தேதி 2வது ஒருநாள் போட்டியும், திருவனந்தபுரத்தில் ஜனவரி 15ந் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இந்திய நட்சத்திர வீரர் கோலி டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு
காயம் காரணமாக பும்ரா இடம் பெறவில்லை. அது போல காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த ஓருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார்.
இது போன்ற தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.