பாட்ஷா படபாடலில் ரஜினி குறித்து மனம் திறந்த தேனிசைத் தென்றல் தேவா. நான் ஓன்றும் கமல், பிரபுதேவா இல்ல சார் நமக்கு லோக்கல் மெட்டு போடுங்க சார் என்று கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹூட். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் 100, 150 நாட்கள் என தியேட்டர்களை அலங்கரித்த காலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நடிப்பில் தளபதி, அண்ணாமலை, முத்து, வீரா, படையப்பா என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வெற்றி கண்டவர்.
தனக்கே உரிய நடை உடை பாவனை ஸ்டைல் பேச்சு என அனைத்தாலும் தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் படங்கள் அப்போதே டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இல்லாத காலங்களிலும் மலேசியா, சிங்கபூர், ஜப்பான் என பல நாடுகளில் இவரது படங்களை ரசிகர்கள் பார்த்து வந்துள்ளனர்.

பாட்ஷா படத்தில் வரும் முதல் பாடலான நான் ஆட்டோக்காரன் நான் ஆட்டோக்காரன் என்ற பாடலை கொஞ்சம் வெஸ்டனில் வேறு விதமாக எடுத்து செல்லலாம் என நினைத்தேன். ஆனால், அதற்கு ரஜினிகாந்த் சார் நான் கமல், பிரபுதேவா இல்ல நமக்கு இந்த லோக்கல் மெட்டுல போடுங்க போதும் சார் என மனம் திறந்து சொன்னதை இசைத்தென்றல் தேவா ஓரு பேட்டியின் போது கூறியுள்ளார்.
ரஜினி ஓரு எதார்த்தவாதி தான் என்ற கர்வம் எப்போதும் அவரிடம் இருந்தது இல்லை. அவரது வழி உண்மையாகவே தனி வழி தான் என்றும் கூறினார். இந்த நிலையில், நாளை ரஜினியே எழுதி தயாரித்த பாபா ரீரிலிஸ் ஆகவுள்ளதை இப்போதையே இளம் ரசிகர்களும் வரவேற்கின்றனர் என்றால் அவரின் நடிப்பும் திறமையும் சும்மாவா என நினைக்கும் அளவிற்கு இருக்கின்றது.
இதையும் படியுங்கள்: விஜய்சேதுபதியுடன் நடிக்க விருப்பம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.