கிரிஸ் கெயில் மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த தேவால்ட் ப்ரேவில்ஸ் தென்னாப்பிரிக்காவிற்கு இளம் ஏபிடி வில்லியர்ஸ் கிடைத்த மகிழ்ச்சியில் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்.
முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகளும் 50 ஓவர் என்ற ஓருநாள் தொடர் மட்டுமே நடைபெறும். நவீன காலத்திற்கு ஏற்ப ஓவர்கள் குறைக்கப்பட்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அதிகரிக்க தொடங்கியது. தற்போது டெஸ்ட் போட்டிகள் ஓருநாள் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து 20 ஓவர் கிரிக்கெட்களே அதிகரித்து காணப்படுகிறது.
இந்த 20 ஓவரில் அவரவர் தன் திறமையால் அதிரடி காட்டத் தொடங்கி சிறப்பாக விளையாடி பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். குறிப்பாக இது போன்ற தொடர்களில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதை அனைவரும் விரும்புவர் குறைந்த பந்துகளில் அதிகபட்ச ரன்களை எடுப்பதை வீரர்கள் விரும்புவர்.

அந்த வரிசையில் தென்னாப்பிரிக்க இளம் வீரர் ஓருவர் ஏபிடி வில்லியர்ஸ் விளையாடும் தோரணை போலவே பந்துவீச்சார்களின் அனைத்து பந்தையும் பதம் பார்த்து வெறும் 57 பந்துகளில் 162 ரன்கள் 13 ஃபோர்கள், 13 சிக்ஸ்களை தெரிக்கவிட்டு சாதனை புரிந்துள்ளார் தேவால்ட் ப்ரோவிஸ் இவர் 52 பந்துகளில் 150 ரன்களை கடந்து கிரிஸ்கெய்லின் 53 பந்துகளில் 150 ரன்கள் எடுத்திருந்த சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார். இப்பினும் இதுவரை யாராலும் அடிக்க முடியாத 175 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தவர் கிரிஸ் கெயில் ஐபிஎல்லில் RCBக்காக விளையாடினார்.
தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெறும் சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் உள்ளூர் தொடரில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் அக்டோபர் 31ஆம் தேதியன்று நடைபெற்ற நைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஓவ்வொரு பந்திலும் அதிரடி காட்டி சதமடித்தார்.
இதையும் கவனியுங்கள்: T20 உலக கோப்பை 2022: இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது
போட்ச்பெஸ்ட்ரூம் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டைட்டன்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி எதிரணி பவுலர்களை பிரித்து மேய்ந்த அவர் 13 பவுண்டரி 13 மெகா சிக்சர்களுடன் சதமடித்து 162 (57) ரன்களை 284.21 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார். அவரது அதிரடியால் 20 ஓவர்களில் 271/3 ரன்கள் குவித்த டைட்டன்ஸ் பின்னர் 41 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இப்போட்டியில் 162 ரன்களை தெறிக்க விட்ட அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார்.
அந்த பட்டியல்:
1. தேவாலட் ப்ரேவிஸ் : 162, நைட்ஸ்க்கு எதிராக, 2022*
2. குயின் டீ காக் : 140*, கொல்கத்தாவுக்கு எதிராக, 2022
3. பீட்டர் மாலன் : 140*, ஈஸ்டர்ன்ஸ் அணிக்கு எதிராக, 2014
4. ஏபிடி வில்லியர்ஸ் : 133*, மும்பைக்கு எதிராக, 2015
இவர் ஏபிடி வில்லியர்சை ரோல் மாடலாக வைத்து விளையாடி வந்துள்ளார் என்பது அவர் ஓருமுறை கூறியிருக்கிறார். பேட்டிங்கில் மட்டும் அல்லாது பீல்டிங்கிலும் கலக்கி வருகிறார். இந்த போட்டியில் சிக்ஸ் லைனுக்கு சென்ற பந்தை தாவி பிடித்து பந்தை உள்ளே போட்டு நொடு பொழுதில் திரும்பவம் கேட்ச் பிடித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டிம்மில் இருந்து வந்தவர். ஓருசில போட்டிகளில் அதிரடி காட்டினார். இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் தென்னாப்பிரிக்கா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். குட்டி ஏபிடி என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இது போன்ற தகவல்களையும் பிற தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.