நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் அக்னி குண்டம் இறங்கினர் பக்தர்கள்

0
27

நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் தங்களது நேரத்தி கடனை செலுத்தினர்.

நாமக்கல்: இராசிபுரத்தில் பெருமை வாய்ந்த அம்மனாகவும் பெண்களின் தாலியை காப்பவளாக இருந்து அருள் பாலித்து வருகிறாள் நித்திய சுமங்கலி மாரியம்மன் இந்த திருக்கோவிலின் ஓவ்வொரு வருடமும் வருகின்ற ஐப்பசி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஐப்பசி மாத திருவிழா நடத்தப்படாமல் இருந்தது இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா தளர்வுகளுடன் கொண்டாட அனுமதி அளித்ததன் பேரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதையும் படியுங்கள்: இராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மன் தல வரலாறு மற்றும் விழாக்கள்

நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் அக்னி குண்டம் இறங்கினர் பக்தர்கள்

இந்த ஆண்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது மாரியம்மன் திருவிழா முன்னதாக ஊரின் முக்கிய பிரமுகர்கள் கையில் பூக்களுடன் அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலயத்திற்கு சென்று பூக்களால் அம்மனுக்கு அபிசேகங்கள் செய்து பின்னர் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்து அங்கு பொதுமக்கள் வேண்டுதலுடன் கொண்டுவந்திருந்த பூக்களால் அம்மனை அலங்கரித்து அபிசேக ஆராதனை செய்தனர்.

இவ்விழாவில் முதலாக அம்மனின் கணவனாக பாவிக்கப்படும் புதிய கம்பம் நடுதல் நிகழ்வு நடைபெற்றது. பின் அம்மனுக்கு அலங்கார ஊர்திகள் மூலம் தினமும் உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான அக்னி குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை 4 மணி முதல் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனை மனதில் நினைத்து அக்னி குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.

இதன் ஓரு பகுதியாக இன்று மாலை நித்திய சுமங்கலி அம்மனின் தேர் பவனி திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக புதிய தேர் ரூ 6 லட்சம் செலவில் செப்பனிடப்பட்டு சிறப்பான பூஜையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் இன்று மாலை அம்மனின் தேர்பவனி நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவினை ஓட்டி ராசிபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏராளாமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். சுற்று வட்டாரத்தில் உள்ள பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுளையும் பலத்தையும் தந்து காப்பாள் அம்பிகை என்பது நம்பிக்கை.

மேலும், இது போன்ற தகவல்களையும் வேறு பல தகவல்களையும் அறிய தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here