மாரி செல்வராஜ்: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணி ‘கர்ணன்’ படத்தின் வெற்றிக்குப் பின் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
கர்ணன் படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இப்போது உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார். இதற்கிடையே குறுகிய கால படைப்பாக ‘வாழை’ என்ற படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கி முடித்திருக்கிறார்.
இதில் பெரும்பாலும் சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை அவர் இயக்குகிறார். அந்த படங்களுக்கு பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில் நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.