விடுதலை: வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தி்ற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். 2 பாகங்களில் தற்போது முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான தனுஷ் 40க்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். அவர் தன் படத்தில் மட்டுமின்றி மற்ற ஹீரோக்களின் படங்களிலும் புகழ் பெற்ற பல பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். தற்போது முதல்முறையாக இளையராஜா இசையில் ‘விடுதலை’ படத்திற்காக பாடியுள்ளார். நேற்று விடுதலை படத்தின் முதல் பாகத்தில் இளையராஜா இசையில் தனுஷ், அனன்யா பட் இணைந்து பாடிய ‘ஒன்னோட நடந்தா’ பாடல் வெளியிடப்பட்டது. தற்போது இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.