தனுஷ் தமிழ் மட்டும் அல்லாது இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் தடம் பதிவித்து விட்ட ஓரு நல்ல நடிப்பு திறமையுள்ள கலைஞனாக சினிமா துறையில் இருந்து வருகிறார். முன்னணி நடிகராகவும் உலா வருபவர் சினிமாவில் எந்த ஓரு கதாபாத்திரத்தையும் தனக்கானதாக நினைத்து நடித்து சிறப்பான முறையில் நடித்து வெற்றி பெற்று வருபவர் நடிகர் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாத்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நவம்பர் 10 ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கான முதன் முறையாக தானே எழுதியுள்ளார் தனுஷ் இப்பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இப்பாடலின் ஒரு சிறு பகுதியை இன்று, ‘’ஒரு தலை காதலை தந்த…. இந்த தறுதல மனசுக்குள் வந்த ‘’என்று தனுஷ் பாட, அதற்கு ஜிவி பிரகாஷ் தன் பியானோவில் இசை மீட்டினார்.
இதையும் படியுங்கள்: நடிகர் விஜய் படத்திற்கே டஃப் குடுத்த நடிகர் தனுஷ் படம்

இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பகுதியில் வெளியிட இந்த நிகழ்வு வைராலாகியது. இப்படத்தின் தனுஷுடன் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார் வெளியிடவுள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தனுஷின் வாத்தி தமிழிலும் தெலுங்கில் சார் என்ற பெயரிலும் ஓரே நேரத்தில் வெளியாகிறது. இப்படத்தில் வரும் பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ் பாடி ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.