தனுஷின் நானே வருவேன் திரைப்படம் இன்று ரீலிஸ் ஆகியது. நாளை வெளியாகும் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டும் அல்லாது பாலிவுட், ஹாலிவுட் வரை தடம் பதித்து வெற்றி படங்களாக மாற்றி வருகிறார். தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார் என்றால் அது மிகையாகாது. தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் திருச்சிற்றம்பலம் அப்படம் நல்ல வெற்றியை தந்துள்ளது. இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கியிருக்கிறார்.
காதல், காமெடி, சண்டை என அனைத்தும் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த படம் 100 கோடி வசூலில் இணைந்த படங்களின் வரிசையில் உள்ளது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்குள்ளாக தனுஷின் அடுத்த படமான நானே வருவேன் படம் திரைக்கு வந்து ரசிகர்களை ஆராவாரம் செய்ய வைக்கிறது.

நானே வருவேன் திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். செல்வராகவன் இயக்கியுள்ளார். சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ராம், யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் ’நானே வருவேன்’ ரிலீஸில் மோதுவது குறித்து சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவின. இதையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தாணு, தான் எந்த படத்துடனும் போட்டியிடவில்லை என கூறியுள்ளார். ‘குணா’, ‘தளபதி’, ‘வண்ண வண்ணப் பூக்கள்’ ஆகிய படங்களை உதாரணம் காட்டிய அவர், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வேலை செய்தாரோ அதே பாணியை தான் தற்போதும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
இப்படம் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடுவதாக கருதினோம். ஆனால், தனுஷின் அசுரன் படம் நவராத்திரி விடுமுறையில் வெளியிடப்பட்டதை கருத்தில் கொண்டு இப்படமும் செண்டிமென்டாக நவராத்திரி விடுமுறையில் வெளியிடப்படுவதாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.