தனுஷ்: தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள படம் நானே வருவேன். இப்படம் வரும் செப்டம்பர் 30 ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்துஜா மற்றும் எல்லி அவ்ராம் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பிரபு, யோகி பாபு, சரவண சுப்பையா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு அவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளார். தனுஷ் இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு தனுஷ் கொலையாளியாகவும், இன்னொரு தனுஷ் வயதான தோற்றத்திலும் போஸ்டர்களிலும் காணப்படுகிறார்.
கர்நாடக காட்டு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 15 நிமிடங்கள் இப்படம் ஓடுகிறது. இப்படம் வரும் செப்டம்பர் 30 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதே நாளில் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படமும் வெளியாகிறது. இந்த படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடக் கூடியதாக உள்ளது. இரு வேறு விதமான படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இரசிகர்கர் மத்தியி்ல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.