தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் மாஸ் காட்டும் நடிகர் தனுஷ்

0
8

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ படத்தில் அதிரடியாக சண்டைப் போடும் காட்சியை வெளியிட்டுள்ளது படக்குழு.

தமிழ் சினிமாவில் தனக்கு எந்த கேரைக்டர் கொடுத்தாலும் கச்சிதமாக செய்பவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் பிசியாக இருப்பவர். இவரது அண்ணன் இயக்கி உள்ள படம் நானே வருவேன் இப்படம் ரீலிசுக்கு தயாராகி வருகிறது. தற்போது தனுஷ் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதேபோன்று சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற தனுஷ் நடிக்கும் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் மாஸ் காட்டும் நடிகர் தனுஷ்
தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் மாஸ் காட்டும் நடிகர் தனுஷ்

இதற்கிடையே, ஹாலிவுட் படமான தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் என்ற திரைப்படம் வரும் 22ம்தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட சில திரையரங்குகளில் ஓடிடியில் வெளியாகுவதற்கு முன்பாக படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.

2009-ல் மார்க் க்ரீனி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு தி க்ரே மேன் படத்தை ரூசோ பிரதர்ஸ் உருவாக்கியுள்ளனர். ஹாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் காட்சியை வெளியிட்டு உள்ளது படக்குழு. இதனை, கொண்டாடும் ரசிகர்கள் ‘தி க்ரே மேன்’ எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here